மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட மறே பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று(10) மாலை அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் வாய்ப் பகுதியில் இருந்து நுரை வருவதை கண்ட பெற்றோர் உடனடியாக முச்சக்கர வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடை நடுவில் சிறுமி உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவியின் சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடற் பாகங்கள் மேலதிக பரிசோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி பி.தியாகராஜன் தெரிவித்தார்.
மாணவியின் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.