தேசிய மக்கள் சக்தியின் மகளிருக்கான ஒன்று கூடல் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (09.03) இந் நிகழ்வு இடம்பெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான ஒன்று கூடல் என்னும் தொனிப் பொருளில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, மகளிர் எதிர்நோக்கும் பிரச்சனைகள், மகளிருக்கான அபிவிருத்தி செயன்முறைகள் மற்றும் வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் மகளின் பங்குபற்றல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சியானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான சமன்மலி குணசிங்க, பேராசிரியரும் விரிவுரையாளருமான ஜவதனா செல்வராஜ், வவுனியா பிரதேச செயலக மகளிர் அமைப்பு தலைவி ரவீந்திராஜ் சுலோஜினி, கட்சி வட்டார உறுப்பினர்கள், கட்சித் தோழர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




