கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் துப்புரவு பணிகள் இன்றைய தினம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கோப்பாய் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் குறித்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர், பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர் மற்றும பொதுமக்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை துப்புரவு செய்தனர்.
அத்துடன் வைத்தியசாலையின் வளாகத்தில் புதிய மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
இதன்போது அகற்றப்படும் கழிவுகளைத் தரம் பிரித்து உரிய இடத்தில் அப்புறப்படுத்துவதற்கான கழிவு கூடைகளையும் வலி கிழக்கு பிரதேச சபையினர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் வழங்கினர்.







