கல்முனை நெனசல (NTC Lanka Campus) நிறுவனத்தின் 7வது பட்டமளிப்பு விழா அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் என்.ரீ.சி. லங்கா கெம்பஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் எஸ்.எம்.ஹாஜாவின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் தலைமை அலுவலக இஸ்லாமிய வங்கித்துறை முகாமையாளர் முஸ்தகீம் மெளலானா, கொளரவ அதிதியாக ஓய்வு பெற்ற ஜேர்மன் அரசு அதிகாரியும், கல்வி ஆலோசகருமான திரு.கெர்ட் ஹெய்ன்செர் லிங், கெளரவ அதிதி மற்றும் சிறப்பு பேச்சாளராக (AGSEP) Research இன் தலைவர் பேராசிரியர் டாக்டர் டயட் மார் டோரிங் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இணைநிறுவன பங்குதாரர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் பட்டம்பெறும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு இடம்பெற்றதுடன், விசேடமாக பிராந்தியத்தில் ஊடகத்துறையில் சேவையாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எஸ்.அஷ்ரப்கான் மற்றும் லாபிர் முஹம்மட் சார்ஜுன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி
நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.






