வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் 2025ம் ஆண்டிற்கான கலைஞர் ஒன்று கூடலில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு, தெற்கு, மேற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பண்பாட்டு பேரவைகள் இணைந்து 2025ம் ஆண்டிற்கான குறித்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 09.03.2025 முற்பகல் 09.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் தெற்கு பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளதுடன் கலந்து கொள்ளுமாறு அனைத்து கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
