தெற்கு சீனாவில் உள்ள ஒரு ஆற்றில் எண்ணெய் கசிவு சுத்தம் செய்யும் கப்பல் ஒரு சிறிய படகு மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் யுவான்ஷுய் என்ற பகுதியில் படகு போக்குவரத்து பிரதானமாகக் காணப்படுகிறது. அந்தவகையில் ஒரு படகு பொதுமக்களை ஏற்றிச் சென்றதுள்ளது. இந்த நிலையில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் ஒரு பெரிய படகும் மக்களை ஏற்றிச் செல்லும் படகும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.
இந்த விபத்தில் பத்தொன்பது பேர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 11 பேர் உயிரிழந்துடன் மூன்று பேர் மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.