கடுங்குளிர் காரணமாக 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ் தெரிவித்துள்ளார்.
காசாவில் குளிர்காலம் ஆரம்பித்ததிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15ஐ எட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்திய வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.