கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள தருமபுரம் பொதுச் சந்தை அண்மைக்காலமாக உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாகவும் வாரத்தில் இரு நாள் அல்லது ஒரு நாளே கழிவற்றல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு.
இதன் காரணமாக சந்தை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுவதுடன் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக துர்நாற்றம் வீசுவது உடன் ஆங்காங்கே கால்நடைகளின் எச்சங்களும் மழையில் கரைந்தோடி நாளாந்தம் கொள்வளவு செய்யவருவோர் பெரும் அசோகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


