ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலில் முதலாவது தடவையாக இன்று (22) அதிகாலை 4.20 மணியளவில் 4.5 ரிச்டர் அளவில் – 100 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்
இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக இன்று அதிகாலை 4.33 மணிக்கு 4.2 ரிச்டர் அளவில் – 150 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.