ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63ஆவது படமான ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ஆம் திகதி வெளியாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63ஆவது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் திகதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படமான 64ஆவது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், அஜித்தின் 64ஆவது படம் தொடர்பான கிடைத்த புதிய தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸிற்குப் பிறகு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.