சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிணவறையில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது உடலை அடக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பிறகு, அவரது உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.