சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது என்று உயிழப்பதற்கு முன் வைத்தியசாலை முறைப்பாட்டில் மேற்படி பெண் தெரித்துள்ளார் .
இந்தச் சம்பவத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் (வயது 35) என்ற உதவி பிரதேச செயலாளரே உயிரிழந்துள்ளார்.
அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்தச் சம்பவம் நீர்வேலி பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
