யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 6 மணிக்கு யாழ். யாழ்.மானிப்பாய் தொகுதி, சண்டிலிப்பாய் வடக்கு, பிள்ளையார் கோவில் அருகாமையில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த கூட்டத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.


