‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (15) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக மன்னாரில் அமுல்ப்படுத்தப்பட்டது.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.பூலோக ராஜா தலைமையில் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது மத தலைவர்கள், இளைஞர், யுவதிகள், கிராம மக்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகள் இணைந்து வயோதிபர் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.





