இலங்கை கொட்டக்கலை ஹரிங்டன் தோட்டத்தில் சிறப்பான வகையில் ராமகிருஷ்ண மிஷனுடைய சிவானந்த நலன்புரி
நிலையம் வைபரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
காலையில் பக்திபூர்வமாக யாக பூஜைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக சுவாமிகளால் எடுத்து வரப்பட்டதுடன் ஆத்ம லிங்கங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அதே நேரத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி அம்மையார், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேக கிரிகைகள் சிறப்பான முறையில் அச்சுவேலி சிவாகம ஞான பானு சிவ ஸ்ரீ குமாரசுவாமி குருக்களால் நடத்தி வைக்கப்பட்டது.





