ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்துக்களின் முக்கியமான நிகழ்வான நெல் அறுவடையை வீட்டிற்கு எடுத்துவரும் சம்பிரதாய பூர்வ நிகழ்வான தைப்பூசம் ஆலய பிரதமகுருக்கள் கீர்த்திஸ்ரீ வாசன் குருக்களினால் நெல் அறுவடை எடுத்துவரப்பட்டு புதிர்கூட்டும் நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவின் பலபாகங்களிலும் விவசாயிகளால் புதிதெடுக்கும் நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




