அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு ஜெட் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஜெட் விமானத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் தரையிறங்கும் போது கியர் செயலிழந்ததனால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.