இஸ்ரேலின் இந்த தாக்குதல் முன்னெடுப்பு “சிங்கத்தின் வலிமை” (Strength of a Lion) எனப் பெயரிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றி அளித்தால் இஸ்ரேலுக்கு “very survival” பாதிப்பாக அமையும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனை முறியடிப்பதே நோக்கம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர், முழுமையாக ஈரானின் அணு ஆயுத திட்டம் முறியடிக்கப்படும் வரை எத்தனை நாட்களானாலும் இந்த தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளார்.
தெஹ்ரானைச் சுற்றியுள்ள குறைந்தது ஆறு இராணுவத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. இதில், ஈரானின் அணுசக்தி திட்டத்தில் பங்கு வகிப்பதாக நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் முக்கிய பார்ச்சின் தளமும் அடங்கும். இராணுவத் தளங்கள் மட்டுமல்லாமல், இராணுவத் தளபதிகள் தங்கியிருந்த பலத்த பாதுகாப்புடன் கூடிய இரு குடியிருப்புகள் மற்றும் பல அடுக்குமாடி கட்டிடங்களும் இலக்கு வைக்கப்பட்டன. இவை திட்டமிட்ட படுகொலை முயற்சிகளாகத் தெரிகின்றன.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஈரானின் இராணுவ தலைமைக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் மூன்று மூத்த அணு விஞ்ஞானிகளான ஃபெரெய்டூன் அப்பாஸி மற்றும் மொஹமத் மெஹ்தி தெஹ்ரான்ச்சி ஆகியோரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரானின் அணுசக்தி லட்சியங்களின் மையப்பகுதியிலேயே நேரடியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதைக் காட்டுகிறது.
இந்தத் தாக்குதல்களுக்கு மேலாக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரானிய எல்லைக்குள் தொடர்ச்சியான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஒரு இஸ்ரேலிய ஆதாரம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஈரானின் மூலோபாய ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்புத் திறன்களைக் குறிவைத்து, ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன.
தாக்குதலுக்கு பயங்கர பழிவாங்கல் முன்னெடுக்கப்படும் என ஈரானின் supreme leader ஆயத்துல்லாஹ் அலி கமனி தெரிவித்துள்ள்ளார். அத்தோடு, இஸ்ரேல் தமது மக்களை தயாராக இருக்குமாறு ‘emergency of state’ அவசரகாலத்தை அறிவித்துள்ளது.
அத்துடன், தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளதோடு, இந்த தாக்குதல் ‘interest of Israel’ என மார்கோ ரூபியோவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் மற்றும் பதட்டம் உலகம் முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



