மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று சனிக்கிழமை நீராடச் சென்ற பாடசாலை மாணவன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயுள்ளார்.
காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.