கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சேவை வழங்கும் நிலையங்களுக்கான களவிஜயம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
சமூக மட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தலைவர்கள் 30 பேரை உள்வாங்கிய குழு களவிஜயத்தை மேற்கொண்டது.
குறித்த களவிஜயத்தை மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த குழுவானது கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவு, நீதிமன்ற வளாகம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நட்பு நிலையம், பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையம் என்பவற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த சேவை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்பாக சமூக மட்ட தலைவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.




