வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் தாளையடி கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 63 பயனாளிகளுக்கு வெளி இணைப்பு இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது..
63 பயனாளிகளுக்கும் 40 குதிரை வலு கொண்ட யமகா இயந்திரம் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட துணை சங்கங்களுக்கு நேற்று வெளி இணைப்பு இயந்திரம் வழங்கிவைக்கப்பட்ட நிலையில் இன்று தாளையடி கடற்தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 63 பயனாளிகளுக்கும் இலவச வெளி இணைப்பு இயந்திரம் இவ்வாறுஉ வழங்கி வைக்கப்பட்டது.