யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் போதியளவு மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால் அதிகமாக நோயாளர்களை நோயாளர் காவு வண்டியினூடாக வடமராட்சி பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கே கொண்டு செல்வதாகவும்
மருதங்கேணி – பருத்தித்துறை வீதியானது ஆங்காங்கே உடைந்து காணப்படுவதால் அவசரமாக சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை விரைவில் கொண்டு சேர்க்க முடியாது துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் வீதி சரியான முறையில் செப்பனிடப்பட்டால் 45 நிமிடத்தில் செல்லும் நோயாளர் காவு வண்டியானது 15 நிமிடத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை சென்றடையும் என்றும் இதனால் நோயாளர்களை பாதுகாக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும் என்பதாலும்
குறித்த மருதங்கேணி – பருத்தித்துறை வீதியை சரியான முறையில் செப்பனிட்டு தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி.