ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்ற மக்கள் சந்திப்பு யாழ். தென்மராட்சி மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயம் முன்றலில் இன்று(31) பிற்பகலில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில், அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,
“யாழ் மாவட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார்கள். அதற்கு விசேட வேலை திட்டம் ஆரம்பித்துள்ளோம்”
“எந்த ஒரு இனவாதத்திற்கும் நாட்டில் இடம் இல்லை”
“தாய் மொழியில் தொடர்பு கொள்ள கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்”
“சகல இனத்தவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் நிகழ்வென்றை வருட இறுதியில் செய்வோம்”