பண்டாரகம – குங்கமுவ பிரதேசத்தில் ஆற்றில் வீழ்ந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 88 வயதுடைய பண்டாரகம, குங்கமுவ பகுதியில் வசித்து வந்தவராவார்.
குறித்த நபர் மிக வயதானவர் எனவும், நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்பட்டு இருந்தவர் எனவும் வயலுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.