2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கி.மீ தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர்.
இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரிய குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.
சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுக்கொள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2சதவீதம் [1-in-83] வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால் பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது. 8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும்.