தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி நேற்று (28/01/25) செவ்வாய்க்கிழமை மாலை ஏர்பஸ் விமானமானது புறப்படத் தயாராக இருந்தது. இந் நிலையில் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தின் வால் பகுதியானது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் வருகை தந்து தீயை அணைத்தனர்.
குறித்த தீ விபத்தின் போது விமானத்தில் 169 பயணிகள், 7 விமான ஊழியர்கள் இருந்தனர். அவசரகால எஸ்கேப் ஸ்லைடு மூலமாக அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் விமானத்தில் இருந்து தப்பித்த நான்கு பயணிகள் வரையில் காயமடைந்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதிஷ்டவசமாக பயங்கரமான விபத்து கடைசி நிமிடங்களில் தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.