இச் சம்பவம் இன்று மதியம் 2.20 க்கு இடம் பெற்று உள்ளது.
மஸ்கெலியா மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் குடா மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 79 வயது உடைய ஜோன் சிங்கோ என்பவர் நீராட சென்ற வேளையில் நீரில் மூழ்கி மரணித்து உள்ளார்.
இவரது உடலம் இன்று மாலை கரை ஒதுங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் மற்றும் ஏனைய மக்கள் உடலை உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
ADVERTISEMENT
அங்கு நாளை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.