இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழகம் – இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்திருந்தனர்.
அவர்களையே எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, 34 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.