யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் ஆன்மீக அருளுரையும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில்,
ஆன்மீக அருளுரையினை,
“திருவைந்தெழுத்து“ என்ற ஆன்மீகத் தலைப்பில் ஓய்வு பெற்ற சைவ சமய ஆசிரிய ஆலோசகர் திருமதி சிவனொளிபாதம் பரமேஸ்வரி நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் ஆன்மீக, சமூகப் பணிகளுக்காக கரவெட்டியை சேர்ந்த திரு நாகேந்திரராஜா என்பவர்க்கும், புத்தூர், நவக்கிரியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத் தேவை கருதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி ஒருவருக்கும் மடிக்கணினி ஒன்றும் வழங்கிவைக்ப்பட்டது.
இதேவேளை யா/அல்வாய் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
120,000 ரூபா பெறுமதியான கலர் பிறிண்டர்(Colour Printer), பிறிண்டர் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டதுடன்
யாழ்ப்பாணம் பழைய மாணவ சிப்பாய்கள் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக,
நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள 150 மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடாத்துவதற்காக உணவுச் செலவுகளிற்கு ரூபா 75,000 நிதியும் வழங்கப்பட்டதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வலிகாம மாணவர் ஓன்றியத்தினல் நடாத்தப்படவுள்ள கலாச்சாரத்துடன் ஒன்றினைந்த பொங்கல் விழா நிகழ்வுக்காக ரூபா 25,000 நிதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ சமய பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு மருத்துவச் செலவுக்காக ரூபா 40,000 நிதியும், அதே இடத்தை சேர்ந்த. விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு மருத்துவச் செலவுக்காக ரூபா 30,000 நிதியும், நேற்று முன்தினம் வழங்கிவைக்கப்பட்டது.