• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சேவை புரியும் சுகாதார திணைக்களத்துக்கு வடக்கு ஆளுநர் பாராட்டு!

Bharathy by Bharathy
January 21, 2025
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள்
0
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சேவை புரியும் சுகாதார திணைக்களத்துக்கு வடக்கு ஆளுநர் பாராட்டு!
Share on FacebookShare on Twitter

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமானவரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொது மருத்துவமனைப் பணிப்பாளர்கள், ஆதார மருத்துவமனைப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (21.01.2025) இடம்பெற்றது.

முன்னைய ஆளுநரின் காலத்தில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு விண்ணப்பம்கோரி பெறப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெரும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலேயே சேவைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். மாவட்ட பொதுமருத்துவமனையில் போதுமான விடுதிகள் இல்லை என்பதையும் அவர் ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் ஆகியோர் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

மருத்துவமனைப் பணியாளர்களுக்கான விடுதிப்பற்றாக்குறை தொடர்பிலும் சுட்டிக்காட்டினர். இதற்கு மாற்று ஒழுங்காக பளையில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளைப் பயன்படுத்த மாகாண சுகாதரப் பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு ஆளுநர் சாதகமான பதிலை வழங்கினார்.

மன்னார் மாவட்ட பொதுமருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவமனைக்கு விடுதி வசதி அவசரமாகத் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பில் கடந்த காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை என ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.

மருத்துவமனைக்கு கணக்காளர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு பணிப்பாளர் முன்வைத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதம செயலாளரை ஆளுநர் பணித்தார். மன்னார் மாவட்ட மருத்துவமனையை கஷ;டப் பிரதேச மருத்துவமனை என்ற பிரிவுக்குள் இருநது விடுவிக்குமாறும் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியா மாவட்ட பொதுமருத்துவமனைக்கும் ஆளணி தேவைப்பாடுகள் இருப்பதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். மேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள 8 பிரதேச மருத்துவமனைகளுக்கு தாதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதனை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப்பகுதிகளுக்கான அம்புலன்ஸ் படகின் தேவைப்பாடு தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை முன்வைத்தார். மேலும் சாரதிகளுக்கான தேவைப்பாடு அதிகம் இருப்பதாகத் தெரிவித்த பணிப்பாளர், சில சாரதிகள் முன்னறிவிப்பின்றி திடீரென பணியை விட்டு விலகுவதால் இந்த நெருக்கடி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சில மருத்துவமனைகளில் அம்புலனஸ் இருந்தாலும் சாரதிகள் இல்லாத நிலைமை இருப்பதாகத் தெரிவித்தார். ஒப்பந்த அடிப்படையில் அவர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் ஆராயுமாறு பிரதம செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
மருந்து விநியோகிப்பதற்குரிய ஆளணிகளின் பற்றாக்குறை தொடர்பிலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மருந்து விநியோகிப்பவர்களுக்கான பயிற்சிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு நோயாளர்கள் வருவதற்குரிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித்தரவேண்டும் என்ற கோரிக்கை மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கில் ஆளணிப்பற்றாக்குறை நிலவும் நிலையில் சில மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்படும் மருத்துவர்களில் சிலர் முழுமையாக அங்கு பணியாற்றுவதில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.

4 மருத்துவர்கள் மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டால் இருவர் மாத்திரம் ஒரு வாரம் கடமையிலிருப்பர் எனவும் எஞ்சிய இருவரும் விடுமுறையில் செல்கின்றனர் எனவும் குறிப்பிட்ட பணிப்பாளர், இதனால் கடமையிலிருப்பவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், மருத்துவமனைகளுக்கான சுத்திகரிப்பு பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குரிய ஒழுங்குகளை பிரதம செயலர் ஊடாக முன்னெடுக்க ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

மேலும், ஆகக் குறைந்த தேவைப்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி அடையாளப்படுத்துமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்ததுடன், வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் சென்று தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

by selvan
July 2, 2026
0

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு...

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

by selvan
July 2, 2026
0

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. நடைபெற்றது. மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா...

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

by selvan
July 2, 2026
0

மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம்...

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

by selvan
July 2, 2026
0

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர்...

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

by selvan
July 2, 2026
0

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்!

by selvan
July 2, 2026
0

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள்...

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி பறிபோகுமா? – ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணை!

by selvan
July 2, 2026
0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேயை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது!

by selvan
July 2, 2026
0

கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை சுரேஷ் சலே, வழங்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள்...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் வருண ஜயசுந்தர!

by selvan
July 2, 2026
0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச்...

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

by selvan
July 2, 2026
0

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அதி மேதகு சரண்யா வி.கே.எஸ் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நேற்று மாலை 3.30 மணிக்கு நடத்தினார்.இந்த நிகழ்வு கண்டி இந்திய உதவி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி