கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பம்பைமடு பகுதியிலுள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.