யாழ்ப்பாணம் – பாசையூரில் மறைந்த தென்னிந்திய பழம் பெரும் புரட்சி நடிகரும் தமிழக முதலமைச்சருமான டாக்டர் எம்.ஜீ. இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.
இதில் அமரரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அணிவித்ததுடன் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறப்புரையும், வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டன.
ADVERTISEMENT
இதில் யாழ்ப்பாணம் பாசையூர் ஜீம் பிறவுண் குறூப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள், ஞானப்பிரகாசம் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.





