இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அவர் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
இதேநேரம் இன்று மதியம் தெல்லிப்பழையில் நடைபெறும் தேசிய பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றுவிட்டு கொழும்பு திரும்ப உள்ளார்.