யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் வாராந்த நிகழ்வில் நேற்றைய(17) தினம் தெய்வீக இன்னிசை கானம் இடம் பெற்றது.
இதில் இசையாசிரியை திருமதி. ஜெயபாரதி கௌசிகன் அவர்களின் இசைக் கச்சேரியில் கீபோடினை இசைக் கலாமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும், மிருதங்க இசையினை கலாவித்தகர் ப. விக்னேஸ்வரன் அவர்களும், தபேலா இசையினை
தபேலா வித்துவான் ம. பிரபா ஆகியோரும் வழங்கினர்.
இதைவேளை பூநகரி, தெளிகரை பிரதேசத்தை சேர்ந்த பூநகரி மகா வித்தியாலயத்தில் தரம் – 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றும், வடமராட்சி பாடசாலை ஒன்றிற்கு பிறிண்டர்களும் வழங்கிவைக்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
