தொடருந்து சாரதிகளை தரம் 2 இல் இருந்து தரம் 1 ற்கு பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சைகளுக்கு சாரதிகள் தயாராகி வருவதால், இன்று (17) காலை சுமார் 10 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறுந்தூர தொடருந்து சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த பரீட்சை எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் சுமார் 80 சாரதிகள் தோற்றவுள்ளனர். இதன் காரணமாக, இன்று பிற்பகலும் சுமார் 15 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.