கொழும் புறநகர்ப் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோக நடத்தியுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான நோக்கம் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணையை கொஹுவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.