அத்துருகிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கடுவலை பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவார்.
அத்துருகிரிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 33 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,515 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.