வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்று உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வருடம் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது தேர்தல் கடமைகளில் பல அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறித்த உத்தியோகத்தர்களுக்கான தேர்தல் கடமைக்கான கொடுப்பனவுகள் பல மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள போதும் வன்னித் தேர்தல் தொகுதியில் வழங்கப்படவில்லை எனக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வன்னித் தேர்தல் தொகுதியில் தேர்தல் நடைவடிக்கைக்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளது எனவும், இதன் காரணமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும், இதன்காரணமாக தேர்தல் கடமையில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் மாவட்ட செயலகத்தில் இருந்து அறியமுடிகின்றது.