Clean srilanka எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது.
சிறைச்சாலையின் அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை பொறுப்பதிகாரி உள்ளிட்டோரின் தலைமையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரிகின்ற 95 ஊழியர்களும் இணைந்து சிறைச்சாலையின் உள்ளக மற்றும் வெளியாக பகுதிகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஜனாதிபதியின் குறித்த வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கது த இவ்வாரம் முழுவதும் குறித்த வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.