வடக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராகவும், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி. யமுனா ராஜசீலன் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளராகவும், வலிகாமம் (பதில்) வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. லாவண்யா சுகந்தன் வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் (கல்வி அபிவிருத்தி), வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராகவும், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்) த.முகுந்தன் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.