UNFPA நிறுவனத்தின் செயற்றிட்டத்தினை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (07.01.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வலுவூட்டல் செயற்றிட்டத்தினை பரீட்சார்த்தமாக இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்ட இணைப்பாளர் திரு. ந. தயாபரன், UNFPA நிறுவன திட்ட ஆய்வாளர் திருமதி யசாரா நதானியேல் மற்றும் திட்ட உத்தியோகத்தர் பங்குபற்றினார்கள்.