அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
மருதானார்மடம், சுன்னாகம் பகுதிகளில் இன்றையதினம் கையெழுத்து வேட்டை நடாத்தப்பட்டது. இதன்போது பொதுமக்கள், சந்தை வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவர் மாவை சேனாதிராஜாவும் கையொப்பத்தை பதிவு செய்தார்.