அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிக பனிப் பொழிவுடனான கடும் குளிர் காலநிலை மேலும் பல மாநிலங்களைத் தாக்கியுள்ளது.பெரும்பாதிப்பிற்கு உள்ளான 30 மாநிலங்களில் சிலவற்றில் கடுமையான காற்று மற்றும் இடியுடனான கடும் மழை பெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருவத்தில் சுழலினால் ஏற்பட்ட புயல் மத்திய அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கியுள்ளது.ஒரு அடி உயரத்திற்கும் மேலாகப் பனி பொழிந்துள்ளது. இதன் காரணமாக 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.அதிக அளவிலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல பெருந்தெருக்கள் சேதமடைந்ததனை அடுத்து போக்குவரத்துக்கள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தற்போது மத்திய அமெரிக்காவில், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவின் கிழக்கு கரைநோக்கி புயல் நகரும் பட்சத்தில் காலநிலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் எனக் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.