கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிசாரை நெறிப்படுத்தும் கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க தலைமையில் இக் கூட்டம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் வீதி போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் போக்குவரத்து பொலிசார் கலந்துகொண்டிருந்தனர்.இவர்களுக்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெ.ஏ.காலிங்க ஜயசிங்கவினால் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெ.பி.எஸ் ஜெயமகா, யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கெ.இ.என் தில்றுக் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.