யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
யாழ்.தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் இன்று(05) பார்வையிட்டார்.
தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்க்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.
ADVERTISEMENT
அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.