கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதி, கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாலத்தின் ஊடாக முல்லைத்தீவு – பரந்தன் இடையே பயணிக்கும் பயணிகள் இரவு நேரத்தில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், பலர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் பரந்தன் பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி, குறித்த பாலத்தினூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஜெய்க்கா வீட்டுத்திட்டம், இக்பால் நகர், நிலாவளி பகுதியைச் சேர்ந்த அண்டன் சாந்தன் (வயது 23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சசிகரன் சிம்புரதன் (வயது 21) என்பவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.