சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கல்கமுவ மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா தமயந்தி எனும் 57 வயதுடைய பெண் ஆவார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நல்லதண்ணியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.