தன்னார்வ ரீதியாக ஒன்று சேர்ந்து யாழில் இளைஞர்களே முன்னெடுத்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பூரண அனுசரனையோடு கருகம்பனை பொது அமைப்புகளும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் இணைந்து நடாத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை 08.30 மணிக்கு கருகம்பனை சந்தியில் ஆரம்பமானது.
இதில் கிராம சேவையாளர், பொது சுகாதார பரிசோதகர், கிராமத்தவர்கள், இளைஞர்கள் பிரதேச சபை ஊழியர்கள், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.