களுத்துறை தெற்கு கொஹொலான பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு, கொஹொலான பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டுப் பாவனை பொருட்களை கழுவுவதற்காக களுகங்கையில் இறங்கிய போது முதலை கடித்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் நாகொட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.