கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
ஆரம்பத்தில் சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெறுகின்ற இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.